கஞ்சா விற்பனை தொடர்பாக ஒருவர் கைது :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிராமப் பகுதியில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயானம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக, சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நிஜாமுதின் மகன் முகமது ஆசிப்(23) என்ற நபரைபோலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்