செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவப் பிரிவிலேயே அல்ட்ரா ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் இ.சங்கர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லையோர மக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குறிப்பாக மகப்பேறு மருத்துவப் பிரிவு சிறப்பான பணியை ஆற்றி வருகிறது.
தினசரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க நீண்ட தூரம் நடந்து வந்து வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதைத் தவிர்க்க பிரசவ வார்டிலேயே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி, மருத்துவர் அங்கேயே ஸ்கேன்ரிப்போர்ட்டை பார்த்து சிகிச்சைஅளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago