போதைப் பொருள் வழக்கில் கைதாகி இலங்கை சிறையில் உள்ள தமிழரை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை தூதரகம் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மெஹ்ருன் நிஷா உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது கணவர் ரிபாயுதீன் மீது இலங்கையில் 2013-ல் போதைப்பொருள் கடத்தல் வழக்குப் பதிந்து 2016-ல் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவரை இந்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், மனுதாரரின் கணவரை இந்தியச் சிறைக்கு மாற்ற இலங்கைத் தூதரகம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன.20-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago