நெய்வேலி நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனம் ஒன்று நெய்வேலி, கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட தமிழகம் முழுவதும் சீட்டுக் கம்பெனி நடத்தி வருகிறது. ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் 40 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக நெய்வேலி அலுவலகம் தொடங்கி, விருத்தாசலம், வேப்பூர், ராமநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள அந்நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை செய்த இடங்களில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றியதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்