கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை அடுத்த குடிகாடு எனும் கிராமத்தில் உள்ள பால் பண்ணையில் பழங்குடியினர் கொத்தடிமைகளாக பணிபுரிகின்றனர். அவர்களை மீட்க வேண் டும் என பழங்குடியினர் நல அமைப்பினர் கடலூர் மாவட்ட ஆட்சி யரிடம் கடந்த 13-ம் தேதி மனு அளித்தனர். இதையடுத்து கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில், வேப்பூர்வட்டாட்சியர் செல்வமணி, விருத்தாசலம் தொழிலாளர் நல ஆய்வாளர் சார்லி மற்றும் சிறுபாக்கம் போலீஸார் பால்பண்ணைக்குச் சென்றனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாக்யராஜ், சின்ராஜ், சக்திவேல், அஜித் மற்றும் 3 சிறுவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற் கொண்டதில், அவர்கள் உளுந்தூர்பேட்டையை அடுத்த கீரனூர் ஏரிக் கரை பழங்குடியினர் பகு தியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. நேற்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபால கிருஷ்ணனிடம் வேப்பூர் வட்டாட்சியர் செல்வணி ஒப்படைத் தார். மேலும் அவர், பால் பண்ணை உரிமை யாளர்களான சிவா மற்றும் பாண்டியன் ஆகியோர் மீது சிறு பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இதனிடையே வருவாய்த் துறையினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ' சிவா, பாண்டியன் ஆகிய இருவரும் முன்பணம் கொடுத்து அவர்களை பணியில் அமர்த்திஉள்ளனர். பழங்குடியினரின் அறியா மையைப் பயன்படுத்தி, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலரே அவர்களை கொத்தடிமையாக அனுப்பி, கமிஷன் பெற்றதும் தெரிய வந்துள்ளது" என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago