தேனி அரசு மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த 2 விசாரணைக் கைதிகள் தப்பியோடினர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனியில் உள்ள கம்பம் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் புகழேந்தி. கடந்த 13-ம் தேதி கடைக்கு வந்த அல்லிநகரத்தைச் சேர்ந்த முருகனுக்கும் புகழேந்திக்கும் இடையே டீ டோக்கன் கொடுப் பது குறித்து தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் புகழேந்தி, கடை ஊழியர் மணி, முருகன் மற்றும் அவர்களது உறவினர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருதரப்பிலும் 5 பேரை கைது செய்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் மருத்துவ மனையிலிருந்த புகழேந்தி, மணி ஆகியோர் அங்கிருந்து தப்பினர். இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago