இறந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஏதும் இல்லை : திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி பேட்டி

By செய்திப்பிரிவு

சிறுமியின் உடலில் தீக்காயங் கள் மட்டுமே உள்ளது. பாலி யல் ரீதியான தொந்தரவு கொடுத் ததற்கான எந்த அடையாளமும் இல்லை என திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி தெரிவித்தார்.

கொடைக்கானல் மலைப்பகுதி தாண்டிக்குடி அருகே பாச்சலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஐந்தாம் வகுப்பு சிறுமி பிரித்திகா தீவைத்து எரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமி எரிந்து கிடந்த இடத்தை திண்டுக்கல் டிஐஜி விஜய குமாரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

முதற்கட்டமாக சிறுமி உயிரிழந்தது பிரிவு 174-ன் படி சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் உடற்கூறு பரி சோதனை அறிக்கை கிடைக்கப் பெறும். இதன் பிறகு அடுத்த கட்ட விசாரணை நடை பெறும். சிறுமியின் உடலில் தீக்காயங்கள் மட்டுமே உள் ளன. பாலியல் ரீதியான தொந் தரவு கொடுத்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இது குறித்து முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது, என்றார். பேட்டியின்போது விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி. லாவண்யா உடன் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்