தருமபுரி மாவட்டம் அரூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 23-வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் ஆறுமுகம் நினைவரங்கத்தில் தொடங்கியது. மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். முன்னதாக, மாநாட்டு நிகழ்வுகளில் ஒன்றான அரூர் பேருந்து நிலையத்தில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலையம் முதல் மாநாட்டு மண்டபம் வரை தொண்டர் கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago