நல்லூர் இளைஞர் கொலை :

By செய்திப்பிரிவு

சுசீந்திரம் அருகே நல்லூர் மறுகால்தலை பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா (22).இவருக்கும், மயிலாடி காமராஜர் சாலையைச் சேர்ந்தமதுரைவீரன் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த மாதம் மயிலாடியில் உள்ள மதுரைவீரனின் வீட்டுக்கு தீவைத்ததாக செல்லையா மீது அஞ்சுகிராமம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, கடந்த 8-ம் தேதி குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே சென்ற செல்லையா, ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக, மதுரைவீரன் மற்றும் அவரது நண்பர்கள் மீது குளச்சல் போலீஸார் வழக்குபதிவு செய்து அவர்களைத் தேடிவந்தனர். நேற்று மாலை மதுரைவீரன் பிடிபட்டார்.

செல்லையாவை கொலை செய்து, சாமிதோப்பு பகுதியில் உள்ள உப்பளத்தில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார். உப்பளத்தில் அவர் அடையாளம்காட்டிய இடத்தில் செல்லையாவின் சடலத்தை போலீஸார் மீட்டனர். மதுரைவீரன் கைதுசெய்யப்பட்டார். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்