பணகுடி அருகே ரயில் தண்டவாளத்தில்பெண் சடலம் கிடப்பதாக, நாகர்கோவில்ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீஸார்அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அவர், பணகுடி சைதம்மாள்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின்மனைவி கனகமணி(55) என்பது தெரியவந்தது. அவரது மகன் ஓராண்டுக்கு முன்பு ரயில் விபத்தில் உயிரிழந்தார். அப்போதிருந்து மனமுடைந்து காணப்பட்டகனகமணி ஏற்கெனவே விஷம் அருந்திதற்கொலைக்கு முயன்றபோது, உறவினர்களால் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் ரயிலில் அடிபட்டு இறந்திருப்பது குறித்து, நாகர்கோவில் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago