மார்த்தாண்டம் அருகே மாலன்விளை விரிகோட்டை சேர்ந்தவர் ரெதீஷ் (34). கூலித் தொழிலாளியான இவர், நித்திரவிளையில் இருந்து மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஒற்றாமரம் பகுதியில் வந்தபோது, குழித்துறையில் இருந்து வந்த ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்த ரெதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். களியக்காவிளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago