கேரளாவில் ஒமைக்ரான் பரவியதால் - களியக்காவிளை எல்லையில் கண்காணிப்பு :

By செய்திப்பிரிவு

கேரளாவில் ஒமைக்ரான் வைரஸ்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து குமரிமாவட்டத்துக்கு வரும் சுற்றுலாபயணிகளுக்கு களியக்காவிளையில் கரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இரு தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழை காட்டிய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநாட்டில் இருந்து வருவோர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில், களியக்காவிளை எல்லை பகுதியில் சுழற்சி முறையில் சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE