கீச்சாங்குப்பம் நடுநிலைப் பள்ளிக்கு விரைவில் ஹைடெக் லேப் வசதி: பள்ளிக் கல்வி ஆணையர் :

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் மற்றும் கீச்சாங்குப்பம் பஞ்சாயத்தார்களுடன் கலந்துரையாடினார். .

அப்போது, பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆணையரிடம் முன்வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட ஆணையர், வரும் ஜுன் மாதத்துக்கு முன்பே பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைத்து கொடுப்பதாக உறுதியளித்தார். மேலும், இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தை பார்வையிட்டு தன்னார்வத் தொண்டர்களுக்கு ஆலோசனை, அறிவுரைகளை வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.மதிவாணன் உடனிருந்தார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் க. சந்திரமோகன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் இரா.பாலு நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்