மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்களில் உணவுத் துறை அமைச்சர் பங்கேற்பு :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் ஆகிய பகுதிகளில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன. இதில், மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த குறைதீர் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக 40 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, 32 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணை மற்றும் 34 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5.10 லட்சம் நிதிக்கான காசோலை ஆகியவற்றை பயனாளிகளிடம் அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: கரோனா நிவாரண நிதி ரூ.4,000, மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாத சலுகை, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல் போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். அதேபோல, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகாண தனித் துறை அமைக்கப்பட்டு, இதுவரை பெறப்பட்ட மனுக்களில் 50 சதவீத மனுக்களுக்கு மேல் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்