திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் ஆரணி காமாட்சியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் அருணகிரி. இவர், உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்த மனைவி மகாலட்சுமியை(42) மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரும் வீடு திரும்பும் வழியில் காந்தி சாலை அருகே வந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதனால், இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விழுந்து காயமடைந்தனர். இது குறித்து ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago