கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் : தி.மலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை நகரம் அவலூர்பேட்டை சாலை, அய்யப்பன் நகரில் வசித்தவர் கட்டிட தொழிலாளி வெங்கடேசன்(40). கட்டிட பணியின்போது இவருக்கும், அவருடன் பணி செய்த வசந்தி(40) என்ற பெண்ணுக்கும் கூடா நட்பு இருந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும், திருவண்ணாமலை அய்யங்குளம் பகுதியில் தனியாக வசித்துள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதன் எதிரொலி யாக, கடந்த 2016 செப்.30-ம் தேதி வெங்கடே சனை தீ வைத்து வசந்தி எரித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 2016 அக்.2-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வசந்தியை கைது செய்தனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வசந்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி திருமகள் தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் வசந்தி அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்