கிரிவலம் செல்ல மீண்டும் தடை விதிப்பு :

திருவண்ணாமலை: கரோனா தொற்று பரவல் காரணமாக, 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஐப்பசி மாதம் வரை என கடந்த 20 மாதங்களாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டது. மேலும், கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றபோது, கிரிவலம் செல்ல தடை இல்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, தீபம் திருவிழா மற்றும் பவுர்ணமி நாளில், கடந்த 20 மாதங்களுக்கு பிறகு கிரிவலம் சென்று அண்ணாமலையாரை பக்தர்கள் வழிபட்டனர்.

இதேபோன்று, மார்கழி மாத பவுர்ணமியிலும் அண்ணாமலையை கிரிவலம் செல்ல அனுமதி இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் காத்திருந்த நிலையில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதாக கூறி மார்கழி மாத கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த மாத பவுர்ணமி 18-ம் தேதி காலை 8.15 மணிக்கு தொடங்கி, 19-ம் தேதி காலை 10.22 மணி வரை உள்ளது. திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே, பக்தர்கள் கிரிவலம் செல்ல, தி.மலைக்கு வர வேண்டாம்“ என கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்