திருப்பூர்: டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொழில் துறையினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் (டீமா) முத்துரத்தினம் பேசும்போது, ‘‘பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் ஜாப் ஒர்க்குக்கு ஜன.1-ம் தேதியில் இருந்து, 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஜிஎஸ்டியை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருப்பூரில் நூல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளின் காரணமாக தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் ஜிஎஸ்டி உயர்வு தொழில் துறையினருக்கு மேலும் சிரமத்தை உண்டாக்கும். எனவே 5 சதவீதத்திலேயே ஜிஎஸ்டியை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago