வெளிநாடுகளில் இருந்து திருப்பூருக்கு திரும்பிய 121 பேர் கண்காணிப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பூர்: வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்த 121 பேரை கண்காணித்து வருவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘ஒமைக்ரான் தொற்று பரவலால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க சுகாதாரத்துறைக்கு மாநில அரசு உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்த 121 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 30 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை, என தெரிய வந்துள்ளது. மீதமுள்ளவர்களை கண்காணித்து வருகிறோம்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்