திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேசிய வாக்காளர் தின விழாவையொட்டி, ‘ஸ்வீப் காண்டஸ்ட் 2022’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் (9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை) கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பங்கேற்க இயலாத மாணவர்கள் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
பல்வேறு தலைப்புகளின் கீழ் ஓவியப்போட்டி, சுவரொட்டி உருவாக்குதல், ஒருவரி வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
மாணவ, மாணவிகள் தங்களின் படைப்புகளை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் 18 வயது நிரம்பிய பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தவறிய மாணவ, மாணவிகள் (14- 17 வயது வரை)‘ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு’என்ற தலைப்பில், ஒருபக்க கட்டுரை எழுதி, தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தியும், 14- 17 வயது வரை உள்ள மாணவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்தின் https://www.elections.tn.gov.in/SVEEP2022/Account/login என்ற இணையதள முகவரிக்கு வரும் 31-ம் தேதிக்குள் அனுப்பலாம். மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 26-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago