திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலை சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே, லோட்டஸ் கண் மருத்துவமனையின் புதிய கிளை நேற்று தொடங்கப்பட்டது. அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையை, கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்து பேசும்போது, ‘‘எத்தனை கிளைகள் உள்ளன என்பதைவிட, இருப்பதை எப்படி நடத்துகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். மருத்துவர்கள் எத்தனை கண்களை வேண்டுமென்றாலும் அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு இருப்பது 2 கண்கள்தான். எனவே, பாசம் மற்றும் பக்குவத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்,’’ என்றார். லோட்டஸ் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி பேசும்போது, ‘‘மக்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கேற்ப இந்த புதிய மருத்துவமனையில் சிறப்பான கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட உபகரணங்களுடன் கண்புரை அறுவை சிகிச்சை, பார்வைக் குறைபாடு, சர்க்கரையால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள், குளுகோமா போன்றவற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்,’’ என்றார்.
மருத்துவமனையின் முதன்மை தலைமை அதிகாரி கே.எஸ். ராமலிங்கம், திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். தொடக்க விழா சலுகையாக வரும் 31-ம் தேதி வரை அனைத்து பொதுமக்களுக்கும், கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 77081 11017 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago