தாவர மரபியல் பூங்காவிலுள்ள மரங்களில் டிஜிட்டல் தகவல் பலகை :

By செய்திப்பிரிவு

கூடலூரை அடுத்த நாடுகாணியில் உள்ள தாவர மரபியல் பூங்காவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு தொடர்பான மாணவர்களுக்கு தேவைப்படும் தகவல்களை அளிக்கும் வகையில் வனத்துறையுடன், கூடலூர் வேலி ரோட்டரி சங்கம் இணைந்து பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள மரங்களுக்கு டிஜிட்டல் பெயர் பலகை வைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றன. மரங்களின் தாவரவியல் பெயர்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த தகவல்களை இப்பலகையில் உள்ள ‘கியூ ஆர்’ குறியீடு மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்