ஓசூர்: ஓசூரில் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த 3 பேரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர்.
தமிழக ஓசூர் எல்லை ஜுஜுவாடியில் சிப்காட் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெங்களூரு நகரிலிருந்து வந்த செகுசு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இச்சோதனையில் காரில் இருந்த பெரிய அட்டைப் பெட்டியில் தடை செய்யப்பட்ட வெளி நாட்டு சிகரெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீஸாரின் விசாரணையில் காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெரி, ஜாவீத், சானு ஆகிய 3 பேர் எனத் தெரியவந்தது. மேலும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை பெங்களூரு நகரிலிருந்து தமிழகம் வழியாக கேரளா கொண்டு செல்வதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த சிப்காட் போலீஸார், ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago