தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் - ரூ.22 கோடி மதிப்பிலான கரோனா சிகிச்சை மையம் :

By செய்திப்பிரிவு

தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் கரோனா மற்றும் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சை மையம் ரூ.22 கோடியில் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் கரோனா மற்றும் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை மையம் ரூ.22 கோடியில் 70,629 சதுர அடியில் தரைத்தளத்துடன் கூடிய 2 மாடி கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. 6 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கரோனா மற்றும் தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தியா முழுவதும் கரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய புதிய வைரஸ்கள் உருவாகி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றனர். தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ரூ.22 கோடியில் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தில் ரத்த பரிசோதனை, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்