புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம், பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்தபுகாரில் தலைமைக் காவலர் சண்முகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தக் காவலர் மீதான புகாரை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதை வாபஸ்பெறக்கோரி காவலர் இயக்க நிர்வாகி உள்ளிட்ட சிலர் சம்மந் தப்பட்ட பெண்ணின் தாயாரை அவர் வேலை செய்யும் ஓட்ட லுக்கு சென்று மிரட்டியதாக புகார்எழுந்தது.
இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் பெண்ணின் தாயார் முறையிட, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த பாலியல் புகார் அளித்தபெண்ணிடம் ரகசியமாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் இருந்தும், அதனை மீறி சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பு காவல் வாகனத்தை நிறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு கிடைக் கவும், அவரை மிரட்டிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி திமுக மகளிரணியினர் துணை அமைப்பாளர் அமுதா குமார் தலைமையில் நேற்று சிபிசிஐடி சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாராவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அப்போது அக்கட்சி நிர்வாகிகள் உடனி ருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago