மங்களூர் கனரா வங்கியில் - போலி ரசீது வழங்கி ரூ.1 கோடி மோசடி? : நகை மதிப்பீட்டாளர்களிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

மங்களூர் கனரா வங்கியில் போலி ரசீது வழங்கி ரூ.1 கோடிமோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர்களிடம் வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பூர் வட்டம் மங்களூரில் உள்ள கனரா வங்கியில் சிறுப் பாக்கம் பகுதியை சேர்ந்த நமச்சி வாயம் (59) , அவரது மகன் சங்கரன் (37) ஆகிய இருவரும் நகை மதிப்பீட்டாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் வாடிக்கையாளர்களிடமிருந்து நகைக் கடன் மீட்க பெறப்பட்ட அசல், வட்டித்தொகை வங்கியில் செலுத்தாமல் போலி ரசீது வழங்கி மோசடிசெய்துள்ளனர். இத்தகவல் அறிந்த50-க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் நேற்று முன்தினம் வங்கியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுப்பாக்கம் போலீஸார் பொதுமக்களை சமாதானம் செய்துஅனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நேற்று அதே பகுதியை சேர்ந்த அமிர்தவல்லி, பெரியசாமி, பொன்னுசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் புகார் அளித்தனர். சுமார் ரூ 1.கோடி கோடி மோசடி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று உறவினர் வீட்டில்பதுங்கியிருந்த நகை மதிப்பீட் டாளர்கள் நமச்சிவாயம், சங்கரன் ஆகியேரை போலீஸார் நேற்று வங்கிக்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து 2 பேரிடமும் வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கியின் மேலாளர் ராஜேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்