முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில் - பெண் எஸ்பியிடம் 6 மணி நேரம் குறுக்கு விசாரணை :

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில் பெண்எஸ்பியிடம் இன்றும் விழுப்புரம் நீதித்துறை நடுவர் மன்றத்தில்குறுக்கு விசாரணை நடைபெறு கிறது.

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த மார்ச் மாதம் பெண்எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந் தார். இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய எஸ்பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சிபிசிஐடி போலீஸார் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பிஆகியோர் மீது ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகிய இருவரும் நேரில் ஆஜரானார்கள். இதே போல் பெண் எஸ்பியும் நேரில் ஆஜரானார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாக குறுக்கு விசாரணை நடத்தினர். நீதிமன்ற அறை கதவுகள் மூடப்பட்டு நடைபெற்ற குறுக்கு விசா ரணையை நடுவர் கோபிநாதான் பதிவு செய்தார்.

குறுக்கு விசாரணை நேற்று நிறைவடையாததால் வழக்கு விசாரணையை இன்று (16-ம் தேதி) ஒத்திவைத்ததுடன், இன்றும் பெண் எஸ்பியிடம் தொடர்ந்து குறுக்கு விசாரணை நடைபெறும் என்று நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE