ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் நேற்று திண்டிவனம், ரெட்டணை, மரக்காணம் ஆகிய இடங்களில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவு மற்றும் சீர்வரிசையை அமைச்சர் மஸ்தான் வழங்கி பேசியது:
பிற மாநிலங்களில் இல்லாத அளவில் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பாரம்பரிய ஊட்டச்சத்து உணவினை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு ஊட்டச்சத்து குறை பாட்டினை போக்கும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மூலமாக விழுப் புரம் மாவட்டத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் மோகன், சிவகுமார் எம்எல்ஏ, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago