உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இலவச ரத்ததான முகாமை நடத்தியது.
கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமினை கல்லூரி துணைத் தலைவர் பழனிராஜா தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் உதயசூரியன் வாழ்த்தி பேசினார். இந்திரா காந்தி மருத்து வமனையின் ரத்த வங்கிப் பிரிவு மருத்துவ அலுவலர் டாக்டர் மணி,அவரது மருத்துவக் குழுவி னரும் இந்த ரத்ததான முகாமினைநடத்தினர்.
கல்லூரியின் பேராசிரியர் களும், மாணவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 41 பேர் ரத்ததானம் வழங்கினர். இம்முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago