பள்ளி விடுமுறை என போலி அறிவிப்பு - புதுச்சேரி சைபர் கிரைமில் கல்வித்துறை இணை இயக்குநர் புகார் :

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் பள்ளி விடுமுறை என போலி அறிவிப்பை வெளியிட்டு, சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் கிரைமில் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி புகார் தந்துள்ளார்.

‘புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து பள்ளிகளும் புதன்கிழமையன்று விடுமுறை’ என்று சமூக வலைத்தளங்களில் கல்வித்துறை வெளியிட்டதாக செய்திக்குறிப்பு செவ்வாய்க்கிழமை இரவு பரவியது. இது போலியானது; வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று கல்வித்துறை அறிவித்தது.

போலியான அறிவிப்பை வெளியிட்டு சமூக வலைத் தளத்தில் பரப்பியோர் மீது நடவடிக்கைக்கோரி சைபர் கிரைம் போலீஸில் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி நேற்று புகார் அளித்தார்.

அந்த புகாரில், “பள்ளி விடுமுறை என சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியதால் மாணவர்கள், பெற் றோர், பொதுமக்கள் தேவையற்ற குழப்பம் அடைந்தனர்.

இணை இயக்குநர் பெயரில் போலியான உத்தரவை தயாரித்து வெளியிட்டு பரப்பியவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற தேவையற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்