போலீஸ் கூறுவதுபோல் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் விஷம் குடித்து இறக்கவில்லை. இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மாணவரின் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் (21), போலீஸார் விசராணைக்குப் பின் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கூறுகையில், மாணவர் மணிகண்டன் போலீஸார் தாக்கி இறக்கவில்லை, விஷம் குடித்து இறந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து மணி கண்டனின் சித்தி ராதிகா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: போலீஸார் தாக்கியதில்தான் மணிகண்டன் இறந் துள்ளார். வாகனச்சோதனையின் போது பிடித்து தாக்கியதை வயலில் வேலை செய்தோர் பார்த்துள்ளனர். ஆனால் போலீஸ் தரப்பில் விஷம் குடித்து இறந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் முதுகுளத்தூரில் போலீஸார் கூறும்போது உணவுக்குழாயில் உணவு சிக்கி இறந்ததாகத் தெரிவித்தனர். பின்னர் விஷம் குடித்து இறந்ததாகவும் பாம்பு கடித்து இறந்ததாகவும், தூக்கிட்டு இறந்ததாகவும் வெவ்வேறான காரணங்களைக் கூறினர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் சட்டத்தை மதித்து நாங்கள் உடலை வாங்கி அமைதியான முறையில் அடக்கம் செய்தோம்.
போலீஸார் வெளியிட்ட சிசிடிவி காட்சியில் உள்ள நேரமும், போலீ ஸார் மணிகண்டனை அனுப்பி வைத்ததாகக் கூறப்படும் நேரமும் வெவ்வேறாக உள்ளது. போலீஸார் சாட்சி, தடயங்களை மறைக்கின்றனர். எனவே, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், என்று கூறினார்.
உள்ளிருப்பு போராட்டம்
இதனிடையே மணிகண்டன் படித்த கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி மாண வர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திட்டமிட்டே போலீஸாரை காப்பாற்றும் நோக்கில் உடற்கூறாய்வு முடிவுகளை மறைத்து வெளியிடுகிறார்கள்.இவ்வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு மாற்றவேண்டும். மணி கண்டனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago