கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில வரும் 18-ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கிருஷ்ணகிரி இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில், கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை, வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கான கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தேர்ச்சி, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ ஆகும். இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை. இத்தகுதியுடைய பணிநாடுநர்கள் தங்களுடைய சுயவிவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன், மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago