பெரியமுத்தூரில் தரிசு நிலத்தை சாகுபடி நிலங்களாக மாற்றும் பயிற்சி :

பெரியமுத்தூர் கிராமத்தில் தரிசு நிலங்களை, சாகுபடி நிலங்களாக மாற்றுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டம் பெரியமுத்தூர் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், அட்மா திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் பிரியா, தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் குறித்தும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) பன்னீர்செல்வம், அட்மா திட்டம் குறித்தும், செயல்பாடுகள் பற்றியும் விளக்கம் அளித்தார்.

எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் நிலையம் தொழில்நுட்ப வல்லுனர் (மனையியல்) பூமதி, ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் மற்றும் மாடித் தோட்டம் அமைத்தல் பற்றி எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் முத்துசாமி, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பெரியமுத்தூர் கிராமத்தில் தரிசு நிலங்கள் வைத்துள்ள பயனாளிகள், பயனடைவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார். இப்பயிற்சிக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், பார்வதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE