தருமபுரி: தருமபுரியில் மாணவர்களை அடித்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி அவ்வை நகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுபவர் சதீஷ்குமார். பள்ளியில் பயிலும் சில மாணவர்கள் முறையாக படிக்கவில்லை எனக் கூறி கண்டித்து அவர்களை ஆசிரியர் சதீஷ்குமார் அடித்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்ததால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் ஆசிரியர் சதீஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago