தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 2 மற்றும் குரூப்-4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நாளை (17-ம் தேதி) முதல் காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலை நாட்களில் நடைபெறவுள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரடியாக வந்து தன்னார்வ பயிலும் வட்ட உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு 94990 55932 என்ற செல்பேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago