தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கன்னியாகுமரியில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நேற்று கலந்தாய்வு மேற்கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் உறுப்பினர்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுநிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து நேற்று ஆய்வு மேற்கோண்டனர்.
கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையை ஆய்வு செய்தனர். அங்குள்ள பழைய 3 படகுகளுடன், தற்போதைய அதிநவீன இரு படகுகளையும் சேர்த்து, 5 படகுகளின் செயல்பாடுகள், அவற்றின் தரம், படகு இல்லத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, மணவாளக்குறிச்சி அரிய மணல் தொழிற்சாலையை பார்வையிட்டனர்.
பின்னர், பொது நிறுவனங்களில் முன்னேற்றம், செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்து, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர். சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், தளபதி, தமிழரசி, நாகைமாலி, நிவேதா முருகன், பாலாஜி, ரூபி மனோகரன், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, குழு அலுவலர் ரவிச்சந்திரன், சார்பு செயலாளர் வளர்வேந்தன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago