தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மதியம் மதுரைக்கு காரில் சென்றார். செல்லும் வழியில் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வரவேற்றார். மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் கதையை விளக்கும் புகைப்படங்களை பார்வையிட்டார்.
அங்கு உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவ வெண்கல சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவிலட்சுமி ரவி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்துகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து மதுரை புறப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago