விசைப்படகு சாய்ந்து ஒருவர் மரணம் :

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை தோணித்துறை சாலை அருகே உள்ள படகு கட்டுமான தளத்தில், பழுது நீக்கும் பணிகள் முடிந்த விசைப்படகு ஒன்றை, சோதனை ஓட்டத்துக்காக நேற்று கடுவையாற்றில் இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விசைப்படகு ஒரு புறமாக சாய்ந்ததில், நாகை காடம்பாடி சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த தோமஸ்(51) படகின் அடியில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த திருசெல்வம், ஹரி ஆதி நாராயணன் ஆகியோர் நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்