பிளஸ் 2 மாணவ, மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த 6 பேர் கைது :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும், டிச.13-ம் தேதி நள்ளிரவு மாணவியின் வீட்டின் முன்நின்று பேசிக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்த மாணவியின் உறவினர்கள் இருவரிடமும் விசாரித்தபோது, இருவரும் காதலிப்பது தெரியவந்தது. இதையடுத்து, உறவினர்கள் அவர்களை அன்று இரவே அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் கமலாதேவி, விசாரணை நடத்தி, திருவோணம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மாணவர்களுக்கு நள்ளிரவில் கட்டாயமாக திருமணம் செய்து வைத்த ராஜா(51), அய்யாவு(55), ராமன்(62), நாடிமுத்து(40), கோபு(38), கண்ணையன்(50) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மாணவரை தஞ்சாவூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுப்பிரமணியனை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்