திருச்சி: திருச்சி திருவானைக்காவல் பகுதியில் விரைவில் திறக்கப்படவுள்ள ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனைக்கு கோவை ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் பகுதியில் 140 படுக்கைகளுடன் ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை தொடங்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்படவுள்ளது. இங்கு ஏழை, எளிய மக்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை 100 சதவீதம் இலவசமாகவும், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மாமோக்கிராம் பரிசோதனை 50 சதவீத சலுகைக் கட்டணத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கென ரூ.85 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்களை கோவை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பாஸ்கர், சுந்தரவடிவேலு, ஜோஸ் சாக்கோ, ஜெய்சங்கர், சுவாமிநாதன், பத்மகுமார் ஆகியோர் திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை தலைவர் ஜெயபால், நிர்வாக இயக்குநர் செந்தில், மருத்துவர் கவிதா செந்தில் ஆகியோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago