பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் விருப்ப மனுக்களை பெறும் நிகழ்வு பெரம்பலூரில் நேற்று தொடங்கியது. பெரம்பலூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புவோரிடம் மனுக்கள் பெறப்பட்டன. திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரனிடம், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ எம்.பிரபாகரன் முன்னிலையில், அக்கட்சி பிரமுகர்கள் பலர் விருப்ப மனுக்களை அளித்தனர். மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் செ.வல்லபன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொருளாளர் செ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago