தூத்துக்குடி தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் 18

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் 18.12.2021 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக ஆண்டாள் தெரு, சத்திரம் சாலை, போல்பேட்டை, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, இனிகோ நகர், விஇ சாலை, பாலவிநாயகர் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் சாலை, தெப்பகுளம், சிவன் கோயில் தெரு, டபுள்யூஜிசி சாலை, சந்தை சாலை, ஜார்ஜ் சாலை, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இன்னாசியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரவியபுரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், விவிடி பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

இதேபோல, ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க. சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் 18.12.2021 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்