தூத்துக்குடி: நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான போலீஸார் நேற்று நாசரேத் அருகேயுள்ள வைத்தியலிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் எந்தவித அனுமதியும் இல்லாமல் குளத்து மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரில் வந்த வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுந்தர் (35), சாத்தான்குளம் அம்பலசேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுடலை கண்ணன் (21), ராமசங்கு மகன் மனோகர் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸார், டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago