தூத்துக்குடி: தூத்துக்குடி மில்லர்புரம் வீட்டுவசதி வாரிய பகுதியில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு மாடியில் 23 பாக்கெட்டுகளில் பவுடர் போன்ற பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பரிசோதனையில் அந்த பாக்கெட்டுகளில் இருந்தது எபிடிரைன் என அழைக்கப்படும் போதை பொருள் என்பது தெரியவந்தது. இந்த எபிடிரைன் ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட நோய்களுக்கு மாத்திரை வடிவில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், போதை மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுவதால் எபிடிரைன் பவுடர் வடிவில் மொத்தமாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
அந்த கட்டிடத்தில் மொத்தம் 23 கிலோ எபிடிரைன் போதை பொருள் இருந்தது. மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி என்று கூறப்படுகிறது. பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago