தி.மலை மாவட்டத்தில் பட்டா மாற்றம் முகாம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் வரும் 22 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தி.மலை மாவட்டத்தில் வரும் 22-ம் தேதி மேல்சீசமங்கலம், செல்லங்குப்பம், செய்யாலேரி, வேளானந்தல், ந.கெங்குப்பட்டு, தலையாம்பள்ளம்-2, சக்கரத்தாமடை, பாளையம், சூத்திரகாட்டேரி, அன்மருதை, மொடையூர், மாணிக்கவல்லி, ஓடநகரம், அரும்பாலூர், ஆத்திப்பாடி, அக்கரைப்பட்டி, மேல்மலச்சி, பீமாரப்பட்டி, மெம்மம்பட்டி, மேல்முத்தானூர், பனை ஓலைப்பாடி, மட்டவெட்டு, கீழ்நெல்லி, திருவிடைராயபுரம், ரெட்டிக்குப்பம், மாணிக்கமங்கலம் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் பட்டா பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளது. அதேபோல், வரும் 24-ம் தேதி திருவத்தூர், பரிதிபுரம், கல்பூண்டி, சு.நல்லூர், ஆதனூர், மடம், இசகொளத்தூர், நல்லடிசேனை, கரிகாத்தூர், குங்கிலியநத்தம், பேராயம்பட்டு, மழுவம்பட்டு, புதுப்பட்டு, தென்மாதிமங்கலம், இருமரம், மூஞ்சூர்பட்டு, கீழ்சாத்தமங்கலம் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்