திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் இன்றும், நாளையும் சிறப்பு முகாமில் வழங்கப்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்துார் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யுடிஐடி) பெற்று பயனடையும் வகையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும், மருத்துவச்சான்று (Form-7), சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவுள்ள புகைப்படம்-1, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் தெளிவான நகல்-1, ஆதார் அட்டை முன் பின் பக்கங்களின் தெளிவான நகல்-1, குடும்ப அட்டை முன் பின் பக்கங்களின் தெளிவான நகல்-1, வாக்காளர் அடையாள அட்டை முன் பின் பக்கங்களின் தெளிவான நகல்-1 ஆகிய ஆவணங்களை தங்கள் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago