மாதனூரில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் :

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளிடமிருந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி பாஜகவினர் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பாஜக மாதனூர் வடக்கு ஒன்றியத் தலைவர் தேவநாதன் தலைமை வகித்தார். நிர்வாகி குமரேசன் வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன், பாஜக உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்