போதை பொருட்கள் கடத்தியவர் கைது :

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் உமர்சாலையில் நகர காவல் துறையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல் துறை குடியிருப்பு அருகே சந்தேகப்படும்படி பைகளை எடுத்து சென்ற நபரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். அதில், அந்த நபர் ஆம்பூர் சின்ன மசூதி தெருவைச் சேர்ந்த அகமத்பாட்ஷா (54) என்பதும், அவரிடம் இருந்த 3 பைகளில் தலா 50 பண்டல் என மொத்தம் 150 எண்ணிக்கையிலான தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பாக்கெட்டுகளை ஆம்பூர் கடைகளில் விநியோகம் செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ.40 ஆயிரம். இதைத்தொடர்ந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்திச்சென்ற அகமதுபாட்ஷாவை நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்