முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்ததாக எழுந்தபுகாரின் பேரில் தமிழகம் முழுவ தும் அவருக்கு தொடர்புள்ள 69 இடங் களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வேலூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொடுக்கப்பட்ட பட்டியலில் தங்கமணியோடு தொடர் புள்ளதாக கூறப்பட்ட வேலூர் மாவட் டம் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சோதனை செய்ய கொடுக்கப்பட்ட முகவரியில் ‘ஜெய் பிளைவுட்ஸ்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியுள் ளனர். அதை வைத்தே அங்கு சோதனை நடத்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்றுள்ளனர்.
ஆனால் நேரில் சென்று பார்க்கும் போது அப்படி எந்த நிறுவனமும் அங்கு செயல்படவில்லை என்பதும், சீனிவாசன் என்பவர் ஒப்பந்த தொழில் செய்து வரும் நிலையில் அதற்கான அலுவலகம் மட்டுமே அங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
போலியான முகவரி என தெரிந்ததால் விசாரணைக்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘எங்களுக்கு கொடுக்கப்பட்ட முகவரியில் ஆய்வு செய்ய வந்தோம். ஆனால் அந்த மாதிரி எதுவும் இல்லாததால் திரும்பினோம்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஜெய் பிளைவுட்ஸ் கம்பெனி செயல்பட்டதாக கூறப்படு கிறது அது குறித்து விசாரித்து வருகிறோம். இங்கு எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago