விவசாய மின் இணைப்பு பெற - தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் :

By செய்திப்பிரிவு

கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அ.தமிழ்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:

கோவை மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட (வடக்கு) கு.வடமதுரை, சீரநாயக்கன்பாளை யம், மேட்டுப்பாளையம் ஆகிய கோட்டங்களில் விவசாயமின் இணைப்பு பெற விரும்புவோர் அந்தந்த பகுதியில் உள்ள மின்வாரிய கோட்ட செயற்பொறி யாளரை தொடர்புகொள்ளலாம்.

ஏற்கெனவே மின் இணைப்பு பெற பதிவு செய்தவர்களும், புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களும் தட்கல் திட்டத்தில் மனு அளித்து, வரையறுக்கப்பட்ட தொகையை வங்கி வரைவோலையாக செயற்பொறியாளரிடம் வழங்கி மின் இணைப்பு பெறலாம். அதன்படி, 5 குதிரைத்திறன் ரூ.2.50 லட்சம், 5 குதிரைத்திறனுக்கு மேல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 10 குதிரைத்திறன்வரை ரூ.3 லட்சம், 15 குதிரைத்திறன்வரை ரூ.4 லட்சத்தை வரைவோலையாக வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கோட்ட செயற்பொறியாளர்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்